கோவை : தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விடாது மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4-வது நாளாக இன்றும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் பெய்யும் மழையைப் பொறுத்து கோவை குற்றாலம் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.