ஈரோடு : சத்தி - திம்பம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை நம்ம ஈரோட்டு பசங்க குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து சீர் செய்ய உதவினர்.
ஈரோடு : சத்தி - திம்பம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை நம்ம ஈரோட்டு பசங்க குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து சீர் செய்ய உதவினர்.
இன்று காலை 6 மணிக்கு சத்தியில் இருந்த புறப்பட்ட அரசுப் பேருந்து திம்பம், தலமலை வழியாக தாளவாடி சென்று கொண்டிருந்தது. அப்போது, காளிதிம்பம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் மழையின் காரணமாக மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடர்ந்த மலைப் பகுதி என்பதால், செல்போன் சிக்னல் கிடைக்காததால், உதவிக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், நடத்துநர் முத்துக்குமார் ,ஈரோடு விஜி, மாவநத்தம் சந்திரன் ஆகியோர் கொட்டும் மழையிலும், வனவிலங்குகள் நிறைந்த காட்டு வழியே சுமார் 4 கி.மீ. நடந்து சென்று மாவநத்தத்தில் கத்தி, கோடாரி உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொண்டு வன ஊழியர்களை அழைத்து வந்தனர்.

அவர்களுடன் நம்ம ஈரோட்டுப் பசங்க குழுவினர் பூபதி, கனி, சந்தோஷ், முத்து, சுந்தர், சக்தி, விஜி ஆகியோர் இணைந்து சுமார் 2 மணிநேரம் போராடி மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே, போக்குவரத்து சரி செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்ய உதவிய அனைவருக்கும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.