மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் : விநாடிக்கு 70,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம், வீடுகளில் சூழ்ந்த வெள்ளம்

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் சூழ்ந்துள்ளன. இதனால், மழை நீரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் சூழ்ந்துள்ளன. இதனால், மழை நீரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 



இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையானது காலதாமதாக துவங்கியிருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரி, கோவை மாவட்டத்திலும், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வறட்சியால் கூழாங்கற்களுக்குள் தவழ்ந்து வந்த மேட்டுப்பாளையம் பில்லூர் அணையை நம்பி உள்ள குடிநீர் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அந்த அணை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கே தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான அப்பர் பவானி, அவலாஞ்சி, கெத்தை போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து 90 அடியை எட்டியது. முழு கொள்ளளவான 100 அடியில் 90 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 96 அடியை தொட்டது. 

பின்னர், அணைக்கான நீர்வரத்து முதலில் 6000 கன அடியாக துவங்கிய நிலையில், அது கொஞ்சம் கொஞ்சமாக 13,000 கன அடி, பின்பு 20,000 உயர்ந்து கொண்டே சென்றதால் முழுகொள்ளளவையும் எட்டியது பில்லூர் அணை. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியே முதலில் 10,000 கன அடி தண்ணீர் உபரியாக திறக்கபட்டது. பின்னர், அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில், விநாடிக்கு 70,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அடர்ந்த காடுகளைக் கடந்து வரும் பவானி ஆறு தனது ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் காடுகளில் கரை ஓரங்களில் இருந்த பழமையான மரங்கள், கட்டைகளுடன் சீறி பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதிகளை விட்டு மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 



கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்படும் வெள்ளம் காரணமாக இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாமண்ண வாட்டர் ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அச்சமடைந்த மக்கள் இடுப்பு அளவு தண்ணீரில் தத்தளித்தனர். 



இதில், மாட்டிகொண்ட முதியவர்களை அந்தப் பகுதி மக்கள் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். இதனையடுத்து, அங்குள்ள மக்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் 5 முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாம் ஏற்பாடுகள் மற்றும் மழை வெள்ளம் குறித்து மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை போன்ற பகுதிகளில் கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், "வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தீயணைப்பு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உணவு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மற்றும் கேரள காடுகளில் வெளுத்து வாங்கும் கனமழையால் கெத்தை, அவலாஞ்சி, எம்ரால்டு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், பில்லூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," எனக் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...