கோவையை ஸ்தம்பிக்க வைத்த மழை : சாலைகள், மேம்பாலங்களின் அடியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவை : அதிகாலை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை : அதிகாலை முதல் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனிடையே, கோவை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. காந்திபுரம், ரயில்நிலைய சாலை, நஞ்சப்பா சாலை, மரக்கடை, கூட்ஸ் செட் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடி வருகிறது. 



இதன் காரணமாக, வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 



இந்த நிலையில், கோவை நகரின் பிரதான சாலையான அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. ரயில்வே பாலத்திற்கு ஒரு அடி வரை வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, அச்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள ரயில்வே பாலம் மற்றும் வடகோவை மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...