கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆக.,09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆக.,09) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், தொடர்ந்து, இடைவிடாது கனமழை பெய்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆக.,09) விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவித்துள்ளார்.