கோவை விமான நிலையத்தை வண்ணமயமாக்கிய வண்ணத்துப் பூச்சிகளின் ஸ்டிக்கர்கள்..!

கோவை : வனவிலங்குகள் மற்றும் மாநில அரசின் சின்னங்களை விமான நிலையங்களில் காட்சிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையம் முழுவதிலும் மாநில பூச்சியான பட்டாம்பூச்சியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை : வனவிலங்குகள் மற்றும் மாநில அரசின் சின்னங்களை விமான நிலையங்களில் காட்சிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையம் முழுவதிலும் மாநில பூச்சியான பட்டாம்பூச்சியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. 



கோவை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அதன் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக, பட்டாம்பூச்சிகளை சாதாரணமாகவே நம்மால் காண முடியும். ஆனால், மாநிலஅரசின் பூச்சி சின்னமான 'தமிழ் மறவன்', காமன் பேண்டுடு பீகாக், கிரிம்சன் ரோஸ், காமன் ரோஸ் மற்றும் லைம் பட்டர்ஃபிளை ஆகியவை அரிதான பட்டாம்பூச்சிகளாகும். 



"கோவையில் அதிகளவில் தென்படும் பூச்சி இனம் என்பதால், பட்டாம்பூச்சிகளின் ஸ்டிக்கர்கள் விமான நிலையத்தில் ஒட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டது. இங்கு வரும் மக்களுக்கு இது போன்ற உயிரினங்களும் இங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்," என்கிறார் பட்டாம்பூச்சிகள் அமைப்பைச் சேர்ந்த மோகன் பிரசாத்.



"இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக கோவை விமான நிலையத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என விமான நிலைய மேலாளர் ஆர். மகாலிங்கம் கூறினார். 



ஏற்கனவே, யானைகள், நீலகிரி வரையாடு மற்றும் கலாச்சாரத்தின் சின்னமான ஜல்லிக்கட்டு காளைகள் கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...