திருப்பூர் : தொடர் மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி வரும் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நொய்யலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளம் அதிகரித்து வருவதன் காரணமாக, நொய்யல் கரையோரத்தில் வாழும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, தாசில்தாரர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வெள்ள அபாய தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.