கோவை : ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தாரைப்பாலத்தின் கீழ் பாயும் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்ததன் காரணமாக ஏற்பட்ட நுரைகள் சாலைகளில் படர்ந்து கிடந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், சாயக்கழிவுகள் கலப்பினால் ஆத்துப்பாலம் அருகேயுள்ள ஆனைமேடு மற்றும் ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலைகளில் நீரில் வெள்ளை நிற நுரை பொங்கி வழிந்தது.

நுரை அதிகளவில் காற்றில் பரவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, நொய்யல் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், வெள்ள நீரில் இருந்து பொங்கி வரும் நுரை சாலை முழுவதும் படர்ந்துள்ளது. நீரும், நுரையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சில கனரக வாகனங்கள் பாலத்தை கடந்த போது, நுரை வாகனங்கள் முழுவதும் படிந்தது. நுரை அதிகளவில் காற்றில் பறந்து செல்வதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். சாயக்கழிவுகள் கலப்பதே நுரை ஏற்படக் காரணமென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.