சிறையில் தண்டனை கைதி போல நடத்தப்பட்டேன் : மாட்டுக்கறி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தி.வி.க. பிரமுகர் குற்றச்சாட்டு

கோவை : மாட்டுக்கறி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, தண்டனை கைதி போல நடத்தப்பட்டதோடு, சிறை காவலர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாக தி.வி.க. கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை : மாட்டுக்கறி தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, தண்டனை கைதி போல நடத்தப்பட்டதோடு, சிறை காவலர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாக தி.வி.க. கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மாட்டுக்கறி தொடர்பாக முகநூலில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- மாட்டுக்கறி தொடர்பாக பதிவிட்டதற்காக என் மீது புகாரளித்த மணிகண்டன் என்பவர் எனது முகநூலில் நண்பராக இல்லை. காவல்துறையே புகாரளிக்க வைத்து, என்னை கைது செய்தனர். விசாரணை கைதியான நான் சிறையில் தண்டனை கைதி போல நடத்தப்பட்டேன். மனரீதியாக சிறையில் இருந்த காவலர்கள் துன்புறுத்தினர்.

தினமும் 10 நிமிடங்கள் குளிக்க மட்டுமே வெளியே விட்டனர். சிறை உணவு தரமற்றதாக இருந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் போல சிறை காவலர்கள் செயல்பட்டனர். வழக்கறிஞர்களைக் கூட என்னை சந்திக்க விடவில்லை. முகநூலில் எழுதியதற்காக என்னை கைது செய்ததாக நினைக்கவில்லை. பா.ஜ.க.விற்கு எதிரானவர்களை ஒடுக்கும் முயற்சியாக எனது கைது நடவடிக்கையை நினைக்கிறேன். தொடர்ச்சியாக, இந்துத்துவா கருத்தியலுக்கு எதிராக எழுதுவேன், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...