ஆனைகட்டி அருகே மணல் கொள்ளையினால் வாழ்வை இழந்து தவிக்கும் ஆறு

கோவை : மணல் கொள்ளை மற்றும் குப்பைகளினால் அழிவை நோக்கி இருக்கும் ஆனைகட்டி கொடுங்கரை பள்ளம் நீர்வழிப்பாதையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : மணல் கொள்ளை மற்றும் குப்பைகளினால் அழிவை நோக்கி இருக்கும் ஆனைகட்டி கொடுங்கரை பள்ளம் நீர்வழிப்பாதையை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓடும் பெரும்பாலான ஓடைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை தழுவிச் செல்லும் மிகவும் பழமை வாய்ந்த நீர்நிலை மணல் கடத்தல் மற்றும் குப்பைகளினாலும் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மூலகங்கல் என்ற மலைப் பகுதியில் உருவாகி பல நீர் ஓடைகள் வழியாக கொடுங்கரை என்ற நீர் வழிப்பாதை ஆனைகட்டியை தழுவி தமிழக கேரள எல்லையை ஒட்டியே கூடப்பட்டியில் உள்ள கூடுதுரையில் சிறுவானி மற்றும் பவானியுடன் சங்கமித்து பரளிகாடு வழியாக பாவானியாக கரைபுரண்டு ஓடுகிறது.



கடந்த காலங்களில் கொடுங்கரை நீர் வழிப்பாதைகளில் மணல் திருட்டு அதிகமாக இருக்கும் காரணத்தால் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கேரள அரசாங்கம் நீர் வழிப்பாதைகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளதைப் போலவே, தமிழக அரசாங்கமும் மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்பதே இப்பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 



அதேவேளையில், இந்த நீர் வழிப்பாதைகள் குப்பைகளினாலும், வேண்டாத தாவரங்களினாலும் ஆக்கிரமித்துள்ளதால் ஓடைகளில் வரும் நீர் பாய்ந்து செல்ல வழி இல்லா நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...