கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், ஓய்வூதியத்துறை இணை இயக்குநர் இளங்கோவன்; துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஷேசாத்திரி, மாவட்ட கருவூல அலுவலர் பி.வி. ராஜா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியதாவது :- மாவட்ட வாரியாக பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையிலுள்ள மருத்துவ நலநிதி, குடும்பநல நிதி பணப் பலன்கள் கணக்கெடுத்து உடனடியாக வழங்குவது தொடர்பாக இன்று ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள் வழங்குதல் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை நிறைவேற்றிடும் விதமாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறை, கல்வித்துறை, வளர்ச்சித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகின்றது.
ஓய்வூதியர் நலப்பிரிவில் பணியாற்றும் அலுவலர்கள் இன்றைய அலுவலர்கள் நாளைய ஓய்வூதியர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கனிவுடன் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து, இம்முகாமில் ஓய்வூதியர்களால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கிய விண்ணப்பங்களுக்கு துரித நடவடிக்கை எடுக்கும்படி பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டது. 61 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.