எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கென சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைத்து மறுவாழ்வு அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் : திருப்பூரில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மறுவாழ்வு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : திருப்பூரில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மறுவாழ்வு அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



நேட்டீவ் மெடிக்கேர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டமானது, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இது குறித்து அந்த தனியார் தொண்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது :- எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தனி நபரையோ, அவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேவையான மருந்து மத்திரைகள் அரசாங்கத்தின் உதவியோடு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகள் தங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 250 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். 

மேலும், நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சத்துப் பொருட்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பு சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு, சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம் தேவையான கடனுதவி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளனர், எனத் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...