கோவை : கோவையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத மாவட்ட நிர்வாகம் மீது பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் மழையினால் 4 நாட்களாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. இதே நிலை, கோவை மாவட்டத்திலும் நிலவி வந்த போதிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்காதது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேம்பாலப் பணிகளும், சாலைப் பணிகளும் நடைபெற்று வருவதால், சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், ஆபத்தான பயணத்திற்கு இந்த மழை வகுக்கிறது. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதோடு, பேருந்து நிறுத்தங்களில் இருந்து பள்ளிகள் சிறிது தொலைவில் இருப்பதாலும் மாணவர்கள் மழையில் நினைந்து செல்லும் நிலை உள்ளது.
கோவையில் இன்னும் ஒருசில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையிலும், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருவதால், கொட்டும் மழையிலும் சென்று மாணவர்களை பள்ளிகளில் இருந்து அழைத்து வருவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வரும் நாட்களில் மழையின் தன்மையைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.