கோவை ரயில் நிலையம் அருகே பார்சல் ஆபீஸ் இடிந்த சம்பவம் ; 2 பேர் பலி

கோவை ரயில் நிலையம் அருகே பார்சல் ஆபீஸ் இடிந்த சம்பவம் ; 2 பேர் பலி



கோவை : கோவை இரயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் ஆபிஸ் இடிந்து விழுந்த சம்பவத்தில் இருவர் பலி ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை ரயில் நிலையம் பின்புறம் பார்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் சுமார் 3 கால் மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க ரயில் நிலைய போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் இடிபாடுகளில் சிக்கிய மணி என்பவரை மீட்டு ரயில் நிலைய போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதில் அவருக்கு தலை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொருவரும் பலியாகியுள்ளார். ஆனால் அவரது பெயர் மற்றும் தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கி கொண்டு இருக்கின்றாரா என்று தேடி வருகின்றனர்.

'

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...