கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர் மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதையடுத்து, கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்திரசேகரன் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில், இவர் இன்று கோவை மாநகர மத்திய பகுதி குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த சோமசேகர் கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, புதிதாக பொறுப்பேற்ற சந்திரசேகரன் காவல் ஆணையரிடம் வாழ்த்து பெற்றார்.