கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ய வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ய வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கஞ்சா, போதை மாத்திரை போன்றவற்றை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, போதைப்பொருள் பயன்பாட்டாளர்களும், விற்பனையாளர்களும் தனிப்படை போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் நோக்கில் கார் ஒன்றில் மூன்று பேர் பச்சாபாளையம் அருகே வந்துள்ளனர். இந்த ரகசிய தகவல் அறிந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி, உதவி ஆய்வாளர் ஜான் ரோஸ் தலைமை காவலர்கள் மணிவண்ணன், ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தேகத்துக்கிடமான காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து, போலீசார் காரை சோதனை செய்தபோது, காரில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

பின்னர், தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (23), செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்த அனுப் ரகுமான் (23), சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்த திஜேஸ்வர் சபரி (22) ஆகியோர் மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 22 ஸ்லிப்பில் உள்ள 220 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் நீதிமன்ற காவலுக்கு படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...