நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த நில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் தொடர் மழையினால், அங்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக இங்கு பகுதிகளில் ஓடும் சிற்றாறுகள் மற்றும் கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும், பில்லூர் அணையும் நிரம்பியது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதேபோல், உதகையில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் முக்கிய சுற்றுலா தலங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் வியாபார நிலையங்களிலும் வியாபாரம் வெகுவாக பாதித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மழை காரணமாக அதிகம் மழை பெய்யும் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை மேலும் தொடர்ந்து பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது.