நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுமாறு விடுத்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

கோத்தகிரியில் கிளப்ரோடில் உள்ள சந்தோஷ் என்பவரின் பேக்கரி மற்றும் மிஷன் கம்பவுண்ட் பகுதிகளில் உள்ள ராயல் பேக்கரி உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் கரடி புகுந்து கதவை உடைத்து கேக், பிஸ்கட் உள்ளிட்டவற்றை உண்டு சென்றுள்ளது. மேலும், மிஷன் கம்பவுண்ட் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் புகுந்த கரடி, அங்குள்ள பொருட்களை நாசம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து. இப்பகுதிகளில் இரண்டாவது முறையாக கரடி புகுந்து உள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

எனவே, வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், வனத்துறையினர் கரடியைப் பிடிக்கக் கூண்டு வைத்துள்ளனர். ஆனால், இதுவரை கரடி சிக்கவில்லை. இருப்பினும், கரடியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.