திருப்பூர் : குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 50-வது வார்டு பட்டுக் கோட்டையார் நகர் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, சாக்கடை நீரானது அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், வாரக்கணக்கில் குப்பைகளை அல்லாத காரணத்தால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வரும் சூழ்நிலை இருந்து வருவதாகவும், அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே வருவதாகக் கூறும் பொதுமக்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதோடு, அடிப்படை.வசதிகளை செய்து தர கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.