தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு

கோவை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். 

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தி வரும் சீர்மிகு நகர திட்டங்கள் (ஸ்மார்ட் சிட்டி) மற்றும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்ட (அம்ரூத்) செயல்பாடுகள் குறித்து இன்று சென்னை, தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்மார்ட் சிட்டி : 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் தலா ரூ. 500 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசிற்கு இணையாக, தமிழக அரசும் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் மொத்தம் ரூ.10,554.75 கோடி மதிப்பீட்டில் 358 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.




அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டம் (அம்ரூத்) :

தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 28 உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தி வரும் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டம் (அம்ரூத்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி மற்றும் கழிவுநீர் கசடு அகற்றும் மேலாண்மை, மழைநீர் வடிகால் வசதி, நகர போக்குவரத்து வசதிகள் அமைத்தல், பசுமை மற்றும் திறந்தவெளி பகுதிகள் ஏற்படுத்துதல் போன்றவை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை உள்பட 12 மாநகராட்சிகள், 15 நகராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி (28 நகரங்கள்) இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.11,441.32 கோடி மதிப்பீட்டிலான 445 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

மேற்படி இரண்டு திட்டங்களையும், மாநகராட்சி வாரியாகவும், நகராட்சி வாரியாகவும் விரிவான ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நடைபெற்று வரும் பணிகளை, குறிப்பிட்ட காலவரையில் முடிக்கப்பட வேண்டும் எனவும், ஒப்பந்தப்புள்ளி கூராய்வில் உள்ள இனங்களை விரைவுபடுத்தி, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் வரும் செப்., 30-க்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைந்து முடித்து அக்டோபர் 01-ம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களையும் உயர் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து திட்டங்களின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.பணிகள் அமல்படுத்துவதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் உடனுக்குடன் நகராட்சி நிர்வாக ஆணையர்/அரசு முதன்மை செயலர் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அலுவலர்களுக்கு தெரிவித்து, திட்டம் அறிவித்த நாளில் இருந்து 5 வருடங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்பதனைக் கவனத்தில் கொண்டு அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...