மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் படத்திற்கு கோவை பா.ஜ.க.வினர் மலர் அஞ்சலி

கோவை : மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உருவப் படத்திற்கு கோவை பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோவை : மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உருவப் படத்திற்கு கோவை பா.ஜ.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சுஷ்மா சுவராஜிற்கு நேற்று திடீனெ மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மண்டல பொறுப்பாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா சுவராஜ் மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும், மாற்று கட்சியினருடன் நல்ல நட்புறவு கொண்ட தலைவராக இருந்தவர் எனவும் அக்கட்சியினர் கூறினர். மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு அதிக அக்கறை காட்டியவர் எனக் கூறிய கோவை மாவட்ட பா.ஜ.க.வினர், மேலும் டிவிட்டர் மூலம் தகவல்களை சிறப்பாக செயல்படுத்தியவர் சுஷ்மா சுவராஜ் எனவும், இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற புகழ் பெற்றவர் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...