இந்த ஆண்டில் மட்டும் 4-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வங்கிக் கடன்கள் மீதான வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு

டெல்லி : நடப்பாண்டில் ஏற்கெனவே மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இன்றைய நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி : நடப்பாண்டில் ஏற்கெனவே மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இன்றைய நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த ஆண்டு மூன்று முறை ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. கடந்த 3 நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களில் தலா 0.25% சதவீதம் குறைக்கப்பட்டது. கடந்த மூன்று முறையைப் போல இந்த முறையும் 0.25% சதவீதம் மட்டுமே குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணிப்பைவிடக் கூடுதலாக 0.10% ரெப்போ வட்டி குறைந்துள்ளது. தற்போதைய ரெப்போ வட்டி 5.4% ஆக உள்ளது. இது ஏப்ரல் 2010-க்குப் பின் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு வட்டி விகிதம் ஆகும். 

ஆறு உறுப்பினர்கள் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட நான்கு பேர் ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். மற்ற இருவர் 0.25 சதவீதம் குறைத்தால் போதும் என வாக்களித்துள்ளனர். வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும் குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஜி.டி.பி. வளர்ச்சி 5.8 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை இருக்கக்கூடும் எனவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு எதிரொலியாக கடன்கள் மீதான வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...