இடைவிடாது பெய்யும் மழையால் நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3-வது நாளாக இன்றும் விடுமுறை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், உதகை மற்றும் குந்தா பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக 3-வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், உதகை மற்றும் குந்தா பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக 3-வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை ஆறாவது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக இங்கு பகுதிகளில் ஓடும் சிற்றாறுகள் மற்றும் கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்து பெய்து வந்த போதிலும் சேதங்கள் வெகு குறைவாகவே உள்ளது. எனினும், மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றது. பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் வியாபார நிலையங்களிலும் வியாபாரம் வெகுவாக பாதித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, மழை காரணமாக அதிகம் மழை பெய்யும் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நான்கு தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவித்து உள்ளது. 



கூடலூரிலிருந்து ஓவேலி செல்லும் சாலையில் பாரம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்களே மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 40 செ மீ. மழை பதிவாகியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...