கோவை : கோவை எலும்பியல் சங்கம் மற்றும் உயிர் திட்டம் சார்பில் எலும்பு மற்றும் மூட்டு வார விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் எலும்பு மற்றும் மூட்டு வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சந்திப்பில் இருந்து இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியில் தமிழக எலும்பியல் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜே. தீனதயாளன் மற்றும் பிரத்யேக ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஆர். சுந்தரராஜன், கோவை எலும்பியல் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பி. தனசேகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது எலும்பு மற்றும் மூட்டுகள் பற்றியும், சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர்.