அவசர கதியில் சட்ட மசோதாக்களை இயற்றும் மத்திய அரசைக் கண்டித்து சி.பி.ஐ.(எம்) கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : அவசர கதியில் சட்ட மசோதாக்கள் இயற்றப்படுவதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ.(எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது.

கோவை : அவசர கதியில் சட்ட மசோதாக்கள் இயற்றப்படுவதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ.(எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அவசர கதியில் சட்ட மசோதாக்களை இயற்றுவதைக் கண்டித்து சி.பி.ஐ.(எம்) சார்பில் கோவை, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், "554 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து உருவாகியது தான் இந்திய நாடு.வும் தற்போது அதி பெரும்பான்மையுடன் மத்தியில் பா.ஜ.க. இருப்பதால் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, மோட்டார் வாகன சட்ட திருத்தம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து என மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது," என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...