"உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையப்படுத்தி தொடர் பிரச்சாரம் : இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தகவல்

கோவை : "உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையக் கருத்தாகக் கொண்டு தொடர் பிரச்சாரம் செய்யப்போவதாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை : "உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையக் கருத்தாகக் கொண்டு தொடர் பிரச்சாரம் செய்யப்போவதாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது :- "உண்மையை உயர்த்தி பிடிப்போம் - நீதியை நிலைநாட்டுவோம்" என்பதை மையக் கருத்தாக கொண்டு ஆக்ஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 ம் தேதி வரை அகில இந்திய அளவில் தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம். தற்போதைய காலகட்டத்தில் மாணவ சமூகத்தினர் தகுதி தேர்வு, கல்வி கட்டண கொள்ளை, நீட், நெக்ஸ்ட் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால், இன்றைய மாணவர் சமுதாயத்தின் நிலை கேள்வி குறியாக ஆகிவிட்டது. 

இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தொடர் பிரச்சாரம் நடக்க உள்ளது. மேலும், தங்களது மாணவர் அமைப்பு 20 மாநிலங்களில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இது கொண்டு செல்லப்படும், என்றனர். 

தொடர்ந்து, 370-வது சட்டப்பிரிவு காஷ்மீரில் அமல்படுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு அவர்கள் பதிலளித்ததாவது :- இது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல். அங்குள்ள மக்களுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தங்களது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளது. காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, என்றனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் நிசார், முன்னாள் மாநில தலைவர் சிக்கந்தர், செயலாளர் சபீர், மாநில கல்வி வளாக செயலாளர் ஆஷிக், கோவை மாவட்ட செயலாளர் ஆரிப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...