கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தடாகம் பகுதி மக்கள் மனு

கோவை : சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தடாகம் பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தடாகம் பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியம் சின்ன தடாகம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகும், பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கடந்த 2017-18 மற்றும் 19-ம் ஆண்டு கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுவரை வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்யவில்லை. மேலும், குடிநீர் பிரச்சனை உள்ளதால் அதனை முறைபடுத்தி விநியோகம் செய்யப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பணியாளர்கள் வருவதில்லை. போர்வெல் மூலம் வழங்கப்படும் குடிநீரில் அதிக உப்பு தன்மை உள்ளதால், குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

சாக்கடை அடைப்பு காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும், பேருந்து நிலையம் அருகே சிமெண்ட் குழாயை அகற்றி, குறுகிய பாலம் அமைத்திட வேண்டும், குடிநீர் மேல்நிலை தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும், என வலியுறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...