திருப்பூர் : ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பா.ஜ.க. அரசு, நேற்றைய தினம் மக்களவை, மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.