பில்லூர் அணைக்கான நீர்வரத்து சரிவு : அணையில் இருந்து 6,000 கன அடி நீர் வெளியேற்றம்

கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கான நீர்வரத்து சரிந்ததையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000-ம் கன அடியாக குறைந்துள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கான நீர்வரத்து சரிந்ததையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000-ம் கன அடியாக குறைந்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நேற்று தனது முழு கொள்ளளவான 100 அடியில் 98 அடி வரை தண்ணீர் எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் வழியே விநாடிக்கு சுமார் 18,000 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. இதனால், பவானியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று இரவு வரை அணைக்கான நீர்வரத்து 16,0000 கன அடியாக இருந்த நிலையில், நள்ளிரவு முதல் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை குறைந்ததால் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 6,000 கன அடியாக குறைந்தது. இதன் காரணமாக, அணையின் நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, மின் தேவைக்காக 6,500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் மழை தொடர்வதால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் நீரோட்டம் சற்று குறைந்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...