90 அடி கிணற்றில் விழுந்த இளைஞரை 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட கோவை தீயணைப்புத் துறையினர் : பொதுமக்கள் பாராட்டு

கோவை : ஆலாந்துறை அருகே 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞரை 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை : ஆலாந்துறை அருகே 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞரை 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரின் தியாகமும், வீரமும் சமூக வலைதளங்களில் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும், இவர்கள் தீயை அணைப்பது மட்டுமல்லாமல், மீட்பு பணியில் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் ஆபத்தில் உள்ள உயிரை காப்பாற்றியும் வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் மற்றும் அவரது தந்தையை தீயணைப்பு வீரர்கள் விரைவாக மீட்டு முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.



இந்த நிலையில், கோவையில் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞரை மீட்க, மீட்பு பணி துறையினர் படும் பாடுகள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை ஆலாந்துறையையடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறு உள்ளது. நீர் இல்லாத வற்றிய இந்த கிணற்றின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்ற 19 வயது இளைஞர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். இப்படியிருக்க இளைஞர் திடீரென வழுக்கி கிணற்றில் விழுந்தார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும், காருண்யா நகர் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் உத்தரவின்பேரில், நிலைய அலுவலர் ரவி சந்திரன் தலைமையிலான ஜீவா, ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் இளைஞரை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.



90 அடி ஆழம் உள்ள கிணற்றில் இறங்கி, அண்ணாமலையை கயிற்றில் கட்டி மேலே தூக்கினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் லேசான காயங்களுடன் அண்ணாமலையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 



இதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் அந்த இளைஞனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவங்களை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரின் வீரதீர செயல்களை பாராட்டிச் சென்றனர்.தீயணைப்பு துறையினர் இளைஞரை மீட்டு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...