கொடிசியாவில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் உதிரி பாகங்கள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் கண்காட்சி வரும் 9-ம் தேதி தொடக்கம்

கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் “டெக்ஸ்பேர்” 2019 எனும் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 4 நாள் சர்வதேச கண்காட்சி வரும் 9-ம் தேதி கோவை கொடிசியாவில் தொடங்குகிறது.

கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் “டெக்ஸ்பேர்” 2019 எனும் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் 4 நாள் சர்வதேச கண்காட்சி வரும் 9-ம் தேதி கோவை கொடிசியாவில் தொடங்குகிறது.



இது குறித்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா அரங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைவர் பி.நடராஜ் கூறியதாவது :- ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்கள் பொருட்களைக் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளனர். மொத்தம் 250 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளது. இதில், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் தங்கள் பொருட்களை கண்காட்சிக்கு வைப்பார்கள். இது தவிர சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் இந்த கண்காட்சியில் பங்குபெற உள்ளனர். இந்த கண்காட்சியுடன் சைமா ஃபார்ம் டு ஃபினிஷ் கண்காட்சி 2019 எனும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 50 ஜவுளி நிறுவனங்கள் தங்கள் பஞ்சு, பருத்தி விதை, நூல், துணி, ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் கைத்தறி ஆடைகளை இடம் பெற வைக்க உள்ளார்கள். கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் தேவையான நூலை தேர்வு செய்வதற்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமையும், என அவர் தெரிவித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...