தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை : தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். 



கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தேசிய மருத்துவ ஆணைய மசோதா தரமற்ற மருத்துவர்களை உருவாக்கும் எனவும், மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தேவையற்றது எனவும் கூறிய மருத்துவ மாணவர்கள், அவற்றை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...