ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான், காஷ்மீரை ஆக்கிரமிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு ஆண்ட மன்னர் ஹரிசிங், இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். 1954-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்த்து காரணமாக வெளியுறவு, பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகள் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள், காஷ்மீரின் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பின்னரே, அங்கு அமலாகும். வெளி மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது. மற்ற மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், அங்குமட்டும் அது 6 ஆண்டுகளாக உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்படுகிறது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (லட்சத்தீவுகள், அந்தமான் போன்று), ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (பாண்டிச்சேரி, டெல்லி போல) மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து பறிபோனதால், இனி காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியும். இந்திய எல்லைக்குள் உள்பட்ட மற்ற மாநிலங்கள் போன்றே காஷ்மீரும் கருதப்படும். நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும். காஷ்மீரின் எல்லைகள் மாற்றியமைக்கலாம். மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலமும் 5 ஆகும். மேலும், யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதால் காவல்துறை, நில அதிகாரம் என்று பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வந்துவிடும்.எப்படி, பாண்டிச்சேரி மற்றும் டெல்லி அரசுகள் இயங்குகின்றனவோ, அதே போல அதிகாரம் குறைந்து காஷ்மீர் அரசு செயல்படும்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...