கோவை : கோவை வனப் பகுதி அருகே முயலை வேட்டையாட முயன்ற 3 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பட்டா நிலத்தில் முயலை வேட்டையாடுவதற்காக வலை போட்டிருந்தனர். இதனைக் கண்ட வனத்துறையினர், திருச்சியைச் சேர்ந்த ராஜா (29), ரஞ்சித் (20), மணிமுத்து (19) ஆகியோரை கைது செய்தனர்.