கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அன்புஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகராட்சி, தெற்கு மண்லடம், 91-வது வார்டு ஜி.ஆர்.ஜி. கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 13.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவருடன் கூடிய சிறுவர் விளையாட்டுத்திடலையும், 90-வது வார்டு கோவைப்புதூர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 9.90 லட்சம் மதிப்பில் சி.எஸ். அகாடமி பள்ளிசாலை தொடர்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. தெருவிளக்குகளின் செயல்பாட்டினையும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

பின்னர், மதுக்கரை, அண்ணாநகர் பகுதியில் இப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் செயல்படும் விதமாக பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 25.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 ஆழ்குழாய் கிணறுகளையும் என ஆக மொத்தம் ரூ. 49.60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.