கோவை : ஆனைகட்டி அருகே மலைப்பகுதியின் சாலையில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயது நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோட்டத்துறை கிராமத்தை சேர்ந்தவர் முரளிதரன் (51). இவர் மது அருந்தி விட்டு செல்லான் (49) என்பவருடன் மூங்கில்பள்ளம் அருகே உள்ள கங்கா சாம்பர்ஸ் பகுதியில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் தண்ணீர் அருந்துவதற்காக காட்டு யானைகள் கூட்டமாக வந்துள்ளன. இருவரும் மதுபோதையில் இருந்ததால், யானைகளை அவர்கள் கவனிக்கவில்லை.

இந்த நிலையில், இருவரையும் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், முரளிதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்லான் மட்டும் அங்கிருந்து காயங்களுடன் தப்பிச் சென்றார்.
இதனிடையே, காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆனைகட்டி போன்ற மலை நகரப்பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.