ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் : நொய்யலை பாதுகாத்த தன்னார்வலர்கள்

கோவை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்த நிலையில், நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

கோவை : ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்த நிலையில், நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.



ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் உள்ள மக்கள் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஓடி வரும் நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதுபோன்று தர்ப்பணம் கொடுக்கும் போது, சேகரமாகும் உணவுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தையும் நொய்யல் ஆற்றில் பொதுமக்கள் எரிந்து விட்டு செல்கின்றனர். இதனால், நொய்யல் ஆற்றின் தன்மை சீரழிந்து வந்தது. இதனிடையே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நொய்யல் ஆற்றினை மீட்டெடுக்கும் பணியில் குளங்கள் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். எனவே, இந்த ஆண்டு ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்தின் போது நொய்யல் ஆற்றினை பேணி காப்பது என அந்த அமைப்பினரும், தன்னார்வலர்களும் முடிவு செய்தனர்.



இந்த நிலையில், இன்று கோவை பேரூர் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் திரண்ட பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். ஆற்றங்கரையில் புரோகிதர்கள் பூஜை செய்து இறந்தவர்களுக்கு பிடித்த உணவுப் பண்டங்கள், பலகாரங்கள், தாழம்பூ, பச்சை நாணல் மற்றும் வேஷ்டி, சேலை உள்ளிட்டவற்றை தானம் கொடுத்தும் வழிபட்டனர். மேலும், பேரூர் பட்டீரஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 



அப்போது, நொய்யல் ஆற்றின் புனிதம் கெடாமல் இருக்கும் விதமாக, பேரூர் ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 



அதோடு, வீணாக தூக்கி எரியப்பட இருந்த உணவுகளை பொதுமக்களிடம் இருந்து வாங்கி, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. 

ஆடிப்பெருக்கின் போது பேரழிவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களிடம் இருந்து நொய்யல் ஆற்றினை காப்பாற்றும் நோக்கிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமான குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பாராட்டை பெற்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...