கோவை : தூய்மையான காற்று, அடர்த்தியான இலை, தழைகளைக் கொண்ட மரங்கள், பல்வேறு வகையான விலங்கினங்கள், மருத்துவ குணம் கொண்ட தாவரங்களைக் கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை. இங்கு அமைதியான சூழலும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுமே பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்ல காரணமாக இருக்கின்றன. அதோடு, இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மலைப்பகுதிகளில் உள்ள பழமையான மற்றும் பழங்குடியின கிராமங்களில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டுவது, சிறு சிறு உயிரினங்களை அழிக்கும் விதமாக புதர்களை அகற்றுவது, தூய்மையான காற்றை மாசடையச் செய்வது, நீலமேகங்களை கருப்படையச் செய்வது போன்ற இயற்கைக்கு எதிரான அசம்பாவிதங்களும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, மலை அடிவாரப் பகுதிகளான பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், தடாகம், வீரபாண்டிபுதூர், சோமையாம்பாளையம் உள்ளிட்ட 5 கிராமப் பஞ்சாயத்துகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஏராளமான செங்கல் சூளைகள் மூடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர். காரணம், உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையை, செங்கல் சூளைகளினால் சட்டவிரோதமாக மண் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்டு வருவது சிறிது தடுக்கப்பட்டிருப்பதால்தான்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், இந்தப் பகுதிகளில் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதற்கு உதவியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இருப்பினும், சட்டவிரோத செங்கல் சூளைகள் மற்றும் மண் அள்ளுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறி வரும் நிலையில், நமது சிம்ப்ளிசிட்டி குழுவினர் கடந்த புதன்கிழமை மாங்கரை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாங்கரை சோதனை சாவடி அப்பகுதியில் இருந்தும், ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் மண் கொள்ளையடிப்பதும், அதிகளவிலான மண் லாரிகளில் ஏற்றிச் செல்லும் சட்டவிரோத காட்சிகள் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது.

சில மர்ம நபர்கள் குறிப்பிட்ட தனியார் நிலங்களில் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியால் 100 அடிக்கும் மிகாமல் பள்ளம் தோண்டி கிடைக்கும் மண்ணை ஒரு இரவில் லாரியில் ஏற்றி கொண்டு சென்று விடுகின்றனர்.
"எனக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித அனுமதியும் வாங்காமல் 80 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி மண் கடத்தப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. எனது நிலத்திற்கு அருகாமையில் உள்ள நிலப்பகுதிகளிலும் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தி செல்கின்றனர்" என்கிறார் மாங்கரை பகுதியில் 40 ஏக்கருக்கு சொந்தக்காரரான ஒருவர்.

இது தொடர்பாக சின்னத்தடாகம் பகுதியில் குடியிருந்து வரும் சமூக ஆர்வலர் டி.எம்.எஸ். ராஜேந்திரன் கூறியதாவது :- சட்டவிரோத செங்கல் சூளைகளை தடுக்கும் நடவடிக்கைகள் பெயரளவிற்கோ அல்லது கண்டு கொள்ளாமலோ அதிகாரிகள் உள்ளனர். இதனால், வனப்பகுதி மட்டுமில்லாமல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் சட்டவிரோத மண் கடத்தல் சம்பவத்தை செயல்படுத்தி, இயற்கை வளங்களை அழிக்கின்றனர். போதிய கண்காணிப்பு இல்லாததால், பல்வேறு இடங்களில் 120 அடிக்கும் அதிகமாக ஜே.சி.பி. இயந்திரத்தைப் பயன்படுத்தி பள்ளத்தை ஏற்படுத்துகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பின்புலமே ஆகும். இதனால், அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
பெரும்பாலான செங்கல் சூளைகள் பன்னிமடை, தடாகம் உள்ளிட்ட 5 பஞ்சாயத்துக்களில் நஞ்சை, புஞ்சை, பஞ்சமி மற்றும் பழங்குடியின கிராமங்களில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் மண் எடுத்து வருகின்றன, என்றார்.
இதனிடையே, மேல்கூறப்பட்ட 5 பஞ்சாயத்துகளிலும் சேர்த்து சுமார் 200 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான செங்கல்களை செய்கின்றனர். ஒவ்வொரு லாரியிலும் 300 செங்கல்களை ஏற்றிச் சென்று பல்வேறு பகுதிகளில் டெலிவரி செய்து வருகின்றனர். செங்கல் ஒன்று ரூ. 2 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எந்தவிதமான வரியும் செங்கல் சூளைகள் செலுத்துவதில்லை. அதேவேளையில், எந்தவிதமான அனுமதியும் பெறுவதில்லை.

"செங்கலை சுட்டெரிப்பதால் வெளியாகும் புகையினால், மாசுபாடு ஏற்பட்டு இந்தப் பகுதிகளில் வாழும் குடியிருப்புவாசிகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான வியாதிகளுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. எனவே, நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்," என்கிறார் சமூக ஆர்வலர் டி.எம்.எஸ். ராஜேந்திரன்.
மற்றொரு சமூக ஆர்வலர் ஜி.பி.என். ஜோஸ்வா கூறுகையில், "தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த யானைகளின் வழித்தடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. மேலும், வனவிலங்குகளுக்கான குடிநீர் ஆதாரத்தை செங்கல் சூளைகள் அழித்து விட்டன. இதன் காரணமாக, மனித - விலங்குகள் மோதல் சாதாரணமாகி விட்டது. தண்ணீருக்காக கிராமவாசிகள் 400 அடி வரையில் நிலத்தில் போர் போடுகின்றனர். ஆனால், செங்கல் சூளையைச் சேர்ந்தவர்கள் 1,200 அடி வரையில் நிலத்தில் போர் போட்டு, அவர்களின் தேவைக்கேற்ப நீரினை எடுத்துக் கொள்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும், எனக் கூறினார்.
"முன்னதாக, இந்த நிலப்பகுதிகளில் அதிகளவிலான விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, இந்த நிலப்பகுதிகள் அனைத்தும் செங்கல் சூளைகளுக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டன. மேலும், இந்த சூளைகளில் கிடைக்கும் வேலைகளுக்காக இப்பகுதி மக்கள், விவசாயத்தை அழித்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல், செங்கல் சூளைகளினால் தோண்டப்படும் குழிகள், கால்நடைகள் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், கால்நடை மேய்ச்சலுக்கான இடம் இல்லாததால், நாங்கள் வேறு வேலையை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இங்கு தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. ஆனால், எங்களது கோரிக்கைகளை யார் கேட்பார்கள்..?," என்கிறார் மாங்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளிங்கிரி.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கே. மோகன்ராஜ் கூறியதாவது :- பெரும்பாலான கிராமங்கள் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. மேலும், வீராபாண்டிபுதூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகள் உள்ளன. ஆனால், இதனை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்க, சுற்றுச்சூழல் துறை மற்றும் பல்வேறு துறைகளின் முறையான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
அதேபோல, பெரும்பாலான செங்கல் சூளைகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளும் விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன. எனவே, இதனை ஒழுங்குபடுத்த அரசு குழு அமைக்க வேண்டும். மேலும், இயற்கை வளங்களுக்கு சேதாரம் விளைவிக்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக அபராதம் விதிக்க வேண்டும், என அவர் கூறினார்.