கோவை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
கோவை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான 61 வீடுகள், நிறுவனங்கள், 85 காலி மனைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ. 119.60 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மற்றும் வருவாயை மறைத்து கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.