கோவை : கோவையில் தேசிய கல்வி கொள்கை திருத்தப்பட வேண்டியதா..?, திரும்பப் பெற வேண்டியதா..? என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டங்களாகவும், கருத்துக் கேட்பு நிகழ்வுகளாகும், விவாதங்களாகவும் வடிவெடுத்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017-ம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது. ஆனால், இந்த தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவை அண்ணாசிலை அருகில் உள்ள தனியார் அரங்கில் நேற்று மாலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தேசிய கல்விக்கொள்கை திருத்தப்பட வேண்டியதா..? திரும்பப் பெற வேண்டியதா..? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவர் பி.எஸ். .உமர் பாரூக் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் கருத்துரை ஏற்ற மூத்த பத்திரிகையாளரும், மார்க்சிய சிந்தனையாளருமான அ. குமரேசன் தேசிய கல்விக் கொள்கையில் சமூக அநீதி என்ற தலைப்பில் விரிவுறைவுரையாற்றினார்.
அவர் கூறியதாவது :- தேசிய கல்வி கொள்கை என்ற அடிப்படையில் மத்திய அரசு சமஸ்கிருதத்தை உட்புகுத்த உள்ளது. இதில். இந்திக்கும், சமஸ்கிருதத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒற்றை மதம் சார்ந்த கருத்துக்களைத் திணிக்கிறது. எதிர்ப்பில்லாமல் நாடு முழுவதும் ஒரு மதக் கோட்பாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இப்படி இன்னும் பல எதிரான கொள்கைகளை கொண்டுள்ளது. ஆகவே, இந்த தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற தொடர்ந்து நம் எதிர்ப்புகளை வைக்க வேண்டும், என்றார்.
இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச் செயலாளர் நடராசன், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மனிதவளத் துறை செயலாளர் பக்ருதீன் அலி அஹமத் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.