பவானி ஆற்றில் 3-ம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : அண்டை மாநிலங்களை போன்று மாற்று திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து கோவைக்கு மூன்றாம் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அண்டை மாநிலங்களை போன்று தொட்டி திட்டத்தில் செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து கோவைக்கு மூன்றாம் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அண்டை மாநிலங்களை போன்று தொட்டி திட்டத்தில் செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து கோவைக்கு மூன்றாம் குடிநீர் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு மாநகராட்சி மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தேக்கம்பட்டியில் நீர் உந்து நிலையம் அமைத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியே குழாய்கள் அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யபட்டது. இதனால், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டங்க்களுக்கு பாதிப்பு ஏற்படும் என இந்த திட்டத்திற்கு மேட்டுப்பாளையம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இந்த திட்டம் குறித்து விவாதிக்க தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கே.புங்கம்பாளையத்தில் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து கோவை மக்களுக்கு மூன்றாம் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்பு அறிவித்த திட்டத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இல்லாத நிலையில், புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்து அதன் மூலம் இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மூன்றாம் குடிநீர்திட்டம் இருக்கும். மேலும், கோவை மக்களுக்கு தண்ணீர் வழங்க எதிர்வரும் 50 ஆண்டு கால மக்கள் தொகை வளர்ச்சியினை கணக்கீடு செய்து பவானி ஆற்றிலிருந்து நீர் உறிஞ்சப்பட உள்ளது. 

இதனால், தண்ணீர் வரத்தானது பவானி ஆற்றில் முற்றிலும் குறைந்து வறண்டு போக வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல், விவசாய நிலங்களில் ஏற்கனவே மின்கோபுரங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தபட்டதற்கு இதுவரை உரிய இழப்பீடு கொடுக்கவில்லை. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே, இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், வறட்சி வனவிலங்கு பிரச்சனை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடும் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். எனவே விவசாய நிலங்களில் தண்ணீர் குழாய்கள் பதிக்கக் கூடாது. மாற்றாக கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களை போல சாலையோரங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து அதன் மூலமாக தண்ணீர் எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...