திருப்பூர் : திருப்பூரில் பொது சுடுகாட்டு பகுதியில் குப்பை உரக்கிடங்கு அமைக்கும் விவகாரம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 50 மற்றும் 51 வது வார்டுக்குட்பட்ட பெரிச்சிபாளையம் மற்றும் திரு.வி.க. செல்லும் வழியில் பொது சுடுகாடு செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த சுடுகாட்டினை பாதுகாக்கும் வகையில், பொதுமக்கள் பங்களிப்புடன் சுடுகாட்டினை சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜீன் 28-ம் தேதி அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவிக்காமல் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மதில் சுவரை இடித்த அதிகாரிகள், குப்பைகளை பிரித்து உரக்கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அப்பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படாது என அதிகாரிகள் உறுதி கொடுத்துள்ளனர்.
இருப்பினும், மீண்டும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் முறையிட்டதையடுத்து, பொதுமக்களிடம் பேசுவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்ய வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் அதிருப்யியடைந்த பொதுமக்கள் அப்பகுதியிலேயே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது சுடுகாட்டில் குப்பை உரக்கிடங்கு அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை மாநகராட்சி செயல்படுத்த முயற்சி மேற்கொண்டால் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.