துடியலூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

கோவை : துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டுள்ளார்.

கோவை : துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தொடர்ந்து அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனிப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு உருவாக்கப்பட்டதிலிருந்து பாலியல் குற்றங்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை எனலாம். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி அதே துடியலூர் பகுதியில் மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை கடந்த மாதம் 28ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (45) என்பவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதைக் கண்ட குழந்தையின் உறவினர் ஆத்திரத்தில் சத்தம் போட்டார். இதை சுதாரித்துக்கொண்ட செல்வராஜ் அந்தப் பகுதியில் இருந்து தப்பியோடினார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக உடனடி புகார் கொடுக்காத குழந்தையின் பெற்றோர் இந்த மாதம் 5-ம் தேதி துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த நிலையில், காலதாமதமான புகாரைக் கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், இது தொடர்பாக விசாரிக்க சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்தனர். இதில், சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ,செல்வராஜ் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், செல்வராஜை போலீசார் கைது செய்து சமூகநலத்துறை அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...