கோவை : மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என கோவை எம்.பி. நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் வங்கி ஓய்வூதியர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 % உயர்த்த வேண்டும், காப்பீட்டு பிரிமியத்தை வங்கி நிர்வாகமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களின் ஒரு நாள் தர்ணா போராட்டம் கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் பதிவேட்டில் இந்தி இருப்பது, கண்டனத்திற்குறியது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. மும்மொழி கொள்கையை மாநில அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும், என்றார்.