கம்போடியா நாட்டு பள்ளிகளில் பாடமாகும் திருக்குறள்..!

கம்போடியா நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிபெயர்த்து பாடமாக பள்ளி பாட நூலில் சேர்க்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கம்போடியா நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிபெயர்த்து பாடமாக பள்ளி பாட நூலில் சேர்க்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

திருக்குறள் உலகின் தொன்மை வாய்ந்த நூலாகும். 1330 குறள்கள் கொண்ட இந்த நூல்தான் உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, திருக்குறள் உலகப்பொதுமறை என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாக பல ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்வதற்காக கம்போடியாவின் கலாச்சார மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் தமிழகத்திற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, 6-ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியாவின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதை மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக அறிந்து கொண்டோம் என தெரிவித்தார். மேலும், காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்கால பெருமைவாய்ந்த வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்தபோதுதான், கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளதை அறிந்தோம் என மார்ன் சொப்ஹீப் கூறினார்.

எனவே, கம்போடியாவின் கேமர் பேரரசுக்கு ஆதரவாக இருந்த ராஜேந்திர சோழனை பெருமைப்படுத்தும் வகையில், அவருக்கு தங்கள் நாட்டில் சிலை வைக்கவுள்ளோம் என்றும், இதற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலக தமிழர்கள் பங்குபெற இருக்கிறார்கள் என கூறினார். மேலும், உலக பொதுமறையான திருக்குறளை கேமர் மொழியில் மொழிபெயர்த்து கம்போடியா நாட்டு பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...