கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் மனு

கோவை : பொது அமைதியை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை : பொது அமைதியை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சமீபகாலமாக நாடு முழுவதும் மத அடிப்படையிலான தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மத அடிப்படையிலான தாக்குதல்கள் தமிழகத்தில் இல்லாத சூழலில், தற்போது இங்கும் தலைதூக்குவதாக இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில், இஸ்லாமிய இளைஞர்களை திட்டமிட்டு தாக்கும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :- குண்டர்களால் இஸ்லாமிய இளைஞர்கள் அடிக்கடி தாக்கப்படுவது இஸ்லாமிய இளைஞர்களின் நிம்மதியைக் கெடுத்து அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல. கடந்த 7-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஜாபர் அராபத் என்ற இளைஞரை 8 பேர் கொண்ட குண்டர்கள் வழிமறித்து வேண்டுமென்றே கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அதேபோல, கடந்த 2-ம் தேதி ரூக்சனா என்ற பெண்மணி இரண்டு இளைஞர்களுடன் வரும்போது ஷேக் என்ற நபர் அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது, சபியுல்லா என்பவர் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் அந்தப் பெண் கொடுத்த பொய்யான புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல் இஸ்லாமிய இளைஞர்களை சிறையில் அடைத்து விட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.

மேலும், சிறையில் இருந்த சபியுல்லா மற்றும் ஷேக் ஆகியோரின் மத அடிப்படையிலான தாடியை வலுக்கட்டாயமாக சிறைத்துறை போலீசார் நீக்கியுள்ளனர். இந்த விவகாரம் சிறையில் இஸ்லாமியர்கள் மத அடையாளங்களைப் பின்பற்ற முடியாத நிலையை உருவாக்குகிறது. இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த புகார் மனு கொடுப்பதற்காக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சியினர், ஜமாத்தினர் என 30-க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...