இந்திய டெக்ஸ்டைல்ஸ் பெடரேசன் சார்பில் தலைமைப்பண்பு குறித்த அகாடமி தொடக்கம்

கோவை : இந்திய டெக்ஸ்டைல்ஸ் பெடரேசன் சார்பில் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தலைமைப்பண்பு குறித்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை : இந்திய டெக்ஸ்டைல்ஸ் பெடரேசன் சார்பில் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தலைமைப்பண்பு குறித்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. 

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில் தலைமைப்பண்பு குறித்த அகாடமியை புகழ்பெற்ற எழுத்தாளரும், வர்த்தக ஆலோசகருமான ஷிவ் ஹேரா தொடங்கி வைத்தார். சுமார் 650-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், அனைவரிடத்திலும் வலுவான தலைமைப் பண்பை உருவாக்கும் நோக்கில் இந்த அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்ந்து, ஓட்டல் ரெசிடென்சியில் இந்திய டெக்ஸ்டைல்ஸ் பெடரேசனின் ஏற்பாட்டாளர் பிரபு தாமோதரனின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், அவர் பேசியதாவது :- ஜவுளித் தொழில் செயல்பாட்டின் பல்வேறு கட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதில், ஒரு சில குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணப்படுகிறது. ஆனால், முக்கிய பிரச்சனையாக பணியாளர்களை மேலாண்மை செய்வதுதான். எனவே, இது போன்ற அகாடமிகளின் மூலம் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள முடியும். நாடு முழுவதும் இந்திய டெக்ஸ்டைல்ஸ் பெடரேசன் சார்பில் 51 யூனிட்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாதத்திற்கு ஒரு வகுப்பு என ஆண்டுக்கு 12 வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நிர்வாக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், நடுநிலை மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...