கோவை : தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் குறுகியே நேரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, பசுமை வழிச்சாலைகள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கோவை : தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் குறுகியே நேரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, பசுமை வழிச்சாலைகள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சி.ஐ.ஐ. மற்றும் ஒய்.ஐ. சார்பில் கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் காவல்துறை, விமான நிலையம் மற்றும் பல்வேறு மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குறைந்த நேரத்தில் தானம் செய்யப்பட்ட உறுப்புகளை மருத்துவமனைகளுக்குச் சென்றடையச் செய்து, மனித உயிர்களைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த பசுமை வழிச்சாலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, கோவை விமான நிலைய இயக்குநர் ஆர். மகாலிங்கம் கூறுகையில், "இந்தப் பணியின் போது பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்கள். எந்தவித சிக்கலும் இன்றி கோவை விமான நிலையத்தில் இருந்து உடல் உறுப்புகள் சென்றடைய வேண்டிய பகுதி வரையில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்த பசுமை வழிச் சாலை திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அத்தியாவசியமானதாகும்," என்றார்.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள், உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு குறைந்த நேரத்தில் சென்றடைவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
