டெல்லி : நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு தகுதித் தேர்வாக நீட் தேர்வு எழுதுவது போல, முதுகலை மருத்துவப் படிப்புக்கு நெக்ஸ்ட் (National Exit Test) எனப்படும் தகுதித் தேர்வைக் கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தத் தகுதித் தேர்வைக் கட்டாயமாக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் ஆ. ராசா, திருச்சி சிவா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, மாநில பாடத்திட்டத்திற்கு மதிப்பளித்து, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.