துரிதகதியில் விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி : கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவாக நடந்து வருவதாக பிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பு சார்பில் இன்று தொடங்கிய தொழில் முதலீடு கருத்தரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவாக நடந்து வருவதாக பிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பு சார்பில் இன்று தொடங்கிய தொழில் முதலீடு கருத்தரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார். 



பிக்கி ஃப்ளோ மகளிர் அமைப்பின் கோவை கிளை சார்பில் முதலீடுக்கான வாய்ப்பை மகளிருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சி கோவை ஹோட்டல் ரெசிடென்சி டவரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை ஆட்சியர் ராஜாமணி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு ப்ளோ அமைப்பின் தேசிய தலைவர் ஹர்ஜிந்தர் கவுர் தல்வார் தலைமை வகித்தார். ப்ளோ அமைப்பு சார்பில் கோவையில் மகளிர் தொழிலதிபர்கள் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. கோவை டெக்ஸ்டைல், பொறியியல், ஐ.டி., விவசாயப் பொருள்களின் சந்தை, போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்களை துவங்குவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மகளிர் தொழிலதிபர்கள் முதலீடு செய்யலாம். 



முதலீடுகளுக்கு தேவையான கடன் வசதிகளை பல்வேறு கீழ்க்கண்ட அரசு நிறுவனங்களும், வங்கிகளும் செய்து கொடுக்கிறது. பாரதிய மஹிலா வங்கி, அன்னபூர்ணா திட்டம் - உணவு கேட்டரிங், ஸ்ரீசக்தி - சிறு வணிகத்தில் பெரும்பான்மை உரிமையைக் கொண்ட பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஓரியண்ட் மஹிலா யோஜனா திட்டம். முத்ரா யோஜனா திட்டம் - பார்லர்கள், கல்வி நிலையங்கள் போன்ற சிறிய நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 50,000 முதல் ரூ. 50 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.



இந்த விழாவில் பிக்கி ஃப்ளோ அமைப்பின் தேசிய தலைவர் ஹர்ஜிந்தர் கவுர் தல்வார் பேசுகையில், "மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மூலமாக சமூகம் முன்னேற்றம் அடையும். அதன் அடிப்படையில், மகளிர் தொழிலதிபர்களை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதனால், கோவை மாவட்டம் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும்," என்று பேசினார். 

தொடர்ந்து, ப்ளோ கோவை அமைப்பின் தலைவர் பூனம் பாஃப்னா பேசும்போது :- கோவையில் மூன்று நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான மகளிர் தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். ஏராளமான தொழிலதிபர்கள் இந்த நிகழ்வின் மூலம் கோவை வட்டாரத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிகழ்வையொட்டி, கலந்துரையாடல், மகளிர் தங்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.



ஃப்ளோ மகளிர் அமைப்பு சார்பில் சங்கம் நிகழ்வு இன்று நடத்தப்படுகிறது. இதையொட்டி, பொதுக்குழுக் கூட்டம் தேசிய தலைவர் ஹர்ஜிந்தர் கவுர் தல்வார் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ப்ளோ பஜார் நிகழ்வும் நடக்கிறது. இதில், மகளிர் செய்த கலை பொருள்கள் காட்சிப்படுத்தப்படும். நிகழ்வின் ஒரு பகுதியாக ஈஷா யோகா மையத்துக்கு சென்று ஜக்கி வாசுதேவை சந்தித்து உரையாட உள்ளோம், என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கலந்து கொண்டு பேசியதாவது :- கோவை மாவட்டம் தொழில், வணிகம், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் மருத்துவம், என துறைகளையும் கொண்டுள்ளது. இந்த துறைகளில் பெண்களின் பங்கும் அதிகமாக உள்ளது. கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், பொருளாதாரத்திலும், கல்வி, கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக தொழில்துறையில் கோவை உள்ளது. சென்னையில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கோவை மிக முக்கிய பங்காற்றியது. கோவையில் ராணுவ தளவாட மண்டலத்தில் இணைத்துள்ளது. கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவாக நடந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்குப்பின் கோவைக்கு இன்னும் அதிக அளவில் முதலீடுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

கோவைக்கு மெட்ரோ ரயில்வே திட்டம் வரும்போது, இன்னும் அதிக கட்டமைப்பு வசதி உள்ள நகரமாக மாறும். கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு பல லட்சம் மக்கள் பயன்பெறுவர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. கோவையில் சிறு, நடுத்தர மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். கோவையில் சமீபத்தில் நடந்த அக்ரி இன்டெக் கண்காட்சி, வேளாண்மை சார்ந்த தொழிலுக்கும் வழி வகுத்துள்ளது. கோவையில் அதிக அளவில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள், திறமையான இன்ஜினியர்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசின் புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் கோவை முன்னணியில் உள்ளது.

தேசிய மற்றும் தனியார் வங்கிகள் கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. அரசின் திட்டங்களை அமல்படுத்துவதிலும், கடன் வழங்குவதிலும் இலக்கையும் தாண்டி உதவி புரிந்து வருகின்றன. பெண் தொழில் முனைவோர் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி புதிய தொழில்களை, எந்த அளவிலும் துவக்க முடியும். எவ்வித பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை தீர்க்க தகுந்த அமைப்புகள் உள்ளன. தொழில் துவங்க அரசு ஒற்றைச்சாளர முறையை கடைபிடித்து வருகிறது.

மகளிர் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள மகளிர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்களுக்கு அரசு முழு வீச்சில் உதவி வருகிறது. மாநிலம் முழுவதிலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு கடன் மானியமும் அளித்து தொழில் துவங்க ஊக்கப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறங்களில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்களை அறிந்து கொள்ளவும், பயிற்சி, கலந்துரையாடல், ஆலோசனைகள் வழங்கவும் பல்வேறு அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக சந்தித்து பேச தயாராக இருக்கிறேன். மாவட்டத்தின் வளர்ச்சியிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு முக்கியமானது. பிக்கி மகளிர் அமைப்பு இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொழில்துறையில் பங்கேற்று, முன்னேற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...